ஜோதிட சாஸ்திர ரீதியாக பட்ஜெட் எப்படி இருக்கும் என ஓர் ஆய்வு செய்வோம்.
பொருளாதார ஜோதிடம் [Financial Astrology] என்ற கருவி பல்வேறு வகையான பொருளாதார துறைகளுக்கு முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்பை அளிக்கும். தற்சமயத்தில் பங்குசந்தைக்கு மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது. ஆனால் தனிநபரின் வருவாய் முதல் நாட்டின் வருவாய் வரை முன்கணித்து சொல்லும் வகையில் இருக்கும் அறிவே பொருளாதார ஜோதிடம்.
இந்திய பட்ஜெட் 2024-2025 குரு ஆளும் வியாழக்கிழமை அன்று லக்னத்தில் குரு இருக்கும் நிலையில் தாக்கல் செய்யப்படுகிறது. குரு என்பது பொருளாதார கிரகம். குரு கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார். சந்திரனுடன் கேது இணைந்திருப்பது லக்ன ராசிகள் குருவுடன் தொடர்புகொள்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் பட்ஜெட் சிறந்த நிலையில் இருக்கும் என்பதும் பல அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும்.
லக்னாதிபதி செவ்வாய் புதனுடன் கூடி அந்த நாளின் சந்திரனுக்கு நட்சத்திராதிபதியாகவும் வருகிறது. எனவே மிகவும் அதிகாரம் மிக்க அறிவிப்புகள் வெளிவரும்.
லக்னத்தில் இருக்கும் குருவுக்கு செவ்வாய் ஒன்பதில் இருக்கிறது. குரு அரசு நிர்வாகம் மற்றும் செவ்வாய் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை குறிக்கும். அரசு சார்ந்த கட்டுமானம் மற்றும் ராணுவத்திற்கு ஒதுக்கீடுகள் அதிகமாக இருக்கும்.
லக்னத்தையும் குருவையும் சனி பார்வை செலுத்துகிறார். எனவே மக்களுக்கும் விவசாயம் ஆகியவற்றிக்கு ஆதரவான பட்ஜெட்டாக இருக்கும்.
பட்ஜெட் ஆதரவு பெறும் துறைகள்
- ராணுவம்
- கட்டுமாணம்
- தொலைதொடர்பு
- விவசாயம்
- ஆட்டோமொபைல்
- விமான போக்குவரத்து
- பெட்ரோலியம்
பட்ஜெட் எதிர் தன்மை பெறும் துறைகள்
- துறைமுகம்
- வெளிநாட்டு ஏற்றுமதி
- மின்னணு பொருட்கள்
- அழகுசாதனம்
- கெமிக்கல்
- வங்கி மற்றும் வட்டி விகிதம்
- அதிநவீன மருத்துவ சிகிச்சை
GDP அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே போல இருக்கும். மேலும் புதிய சலுகைகள் அல்லது ஆச்சரிய தக்க அறிவுப்புகள் இருக்காது. மதம் சார்ந்த , ஆன்மீக இடங்கள் சார்ந்த சலுகைகள் கொண்ட அறிவிப்புகள் இருக்கும்.
பங்குசந்தை 22250 என்ற புதிய புள்ளியை தொடும். பட்ஜெட் அன்று காலை வளர்ச்சியை சந்தித்து, மதியம் 12 மணிக்கு கீழ் இறங்கும். 1.30 மணிக்கு பிறகு நல்ல ஏற்றம் இருக்கும். ஆட்டோமொபைல் மற்றும் மீடியா பங்குகள் சிறப்பாக இருக்கும். எரிவாயு பங்குகள் ஏற்றம் தரும். வங்கி பங்குகள் இறக்கம் சந்திக்கும்.
உங்கள் கருத்துக்களை பட்ஜெட் வெளியீட்டுக்கு பின் இங்கே பதிவிடுங்கள்.

Wow !! 22250 .. Super Swamiji !! very excited to see this happen !!
LikeLike
பயனுள்ள தகவல்,
நன்றி ஸ்வாமி ஜி 🙏
LikeLike
Swamiji, your predictions match with the budget 2024 in the following manner :-
1. Higher Fund allocation to Defence
2. More funds for infrastructure development
3. Medical support through new AIMS Hospitals
4. No change in Tax Structure🙏🎉
LikeLiked by 1 person